எஃபெக்ட்டுகளை எடிட் செய்தல்

ரீஸ்டைல் மூலம் உங்கள் வீடியோக்களை ரீ-இமேஜின் செய்திடுங்கள்

தோன்றுபவர். @omgadrian

Edits இல் உள்ள ரீஸ்டைலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பாருங்கள், இது ஒரு தட்டல் மட்டுமே தேவைப்படும் முன்னமைப்புகளைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களின் மீடியா விவரங்களை உடனடியாக மாற்றும் AI-வழங்கும் உருவாக்க எஃபெக்ட் ஆகும்.

@omgadrian கீஃபிரேம்கள் பற்றிப் பேசுகிறார்Play Icon

ரீஸ்டைல், உங்கள் உடை, இருப்பிடம், ஒளியமைப்பு அல்லது ஸ்டைல் போன்ற உங்கள் வீடியோக்களின் மீடியா விவரங்களைப் படைப்புத்திறன்மிக்க வகையில் மாற்றியமைக்க உங்களை அனுமதிக்கிறது.

ரீஸ்டைல் 10 வினாடிகள் வரையிலான தனிப்பட்ட கிளிப்புகளை ஆதரிக்கிறது.

உங்கள் தேவைகளுக்குப் பொருந்தும் ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை கிடைக்கக்கூடிய அனைத்து ரீஸ்டைல் முன்னமைப்பு வகைகளையும் உலாவுங்கள்.

உங்கள் வீடியோக்களின் உடை, இருப்பிடம் அல்லது ஸ்டைல் போன்ற அனைத்து மீடியா விவரங்களையும் ஒரே தட்டலில் மாற்றுவதைக் கற்பனை செய்து பாருங்கள்!

Edits உங்கள் முழுப் படைப்பாற்றல் செயலாக்கத்திற்கும் உதவிகரமாக உள்ளது, எனவே நீங்கள் சிறந்த வீடியோக்களை உருவாக்க முடியும்.

இது வேடிக்கையானது! வாருங்கள், உங்கள் உள்ளடக்கத்தின் அம்சங்களை ரீ-இமேஜின் செய்யவும், உங்கள் படைப்பாற்றலைக் காட்சிப்படுத்தவும் அனுமதிக்கும் Edits இல் உள்ள AI-வழங்கும் உருவாக்க எஃபெக்ட்டான ரீஸ்டைலைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

[0:21] ஒரு திட்டப்பணியைத் திறந்து, நீங்கள் ரீஸ்டைல் செய்ய விரும்பும் உங்கள் டைம்லைனில் உள்ள ஃபிரேமைக் கிளிக் செய்யுங்கள். மேலும், இந்த அம்சம் செயல்பட உங்கள் கிளிப் 10 வினாடிகளுக்கும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்!

[0:30] கீழே உள்ள கருவிப் பட்டியில் உள்ள ரீஸ்டைல் ஐகானைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் ஒன்றைக் கண்டறியும் வரை முன்னமைப்புகளின் அனைத்து வகைகளையும் உலாவுங்கள். இது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆஹா இது அருமையாக உள்ளது!

[0:39] உங்கள் ஒளியமைப்பு போன்ற எதையும் மாற்றலாம், இதிலிருந்து இதற்குச் செல்லும் வகையில் உங்களை மாற்றிக்கொள்ளலாம். அல்லது உங்கள் இருப்பிடத்தை மாற்றுங்கள். உங்கள் அலுவலகத்தில் படமெடுக்கப்பட்ட விளக்கிப் பேசும் தொடக்க வழிகாட்டிக்குப் பதிலாக, நீங்கள் கடற்கரையில் படமெடுக்கலாம். இல்லையெனில் நீங்கள் ரோமன் காலத்தைச் சேர்ந்த பளிங்குச் சிலையாக இருக்க விரும்பினால், நீங்கள் அந்தச் சிலையாகவும் இருக்கலாம்.

Edits இல் இன்னும் அதிகமான AI-வழங்கும் உருவாக்க எஃபெக்ட்டுகள் வரவிருக்கின்றன, எனவே இணைந்திருங்கள்!

அதைப் பயன்படுத்திப் பார்த்து மகிழுங்கள்! மகிழ்ச்சியாக உருவாக்குங்கள்.