எஃபெக்ட்டுகளை எடிட் செய்தல்
கீஃபிரேம்கள் மூலம் உங்கள் வீடியோக்களுக்கு உயிரூட்டும் விதம்
தோன்றுபவர். @omgadrian
மெதுவாக ஜூம் செய்தல், டைனமிக் மெசேஜ் மற்றும் மேலடுக்குகள் மூலம் அசைவற்ற உணர்வை ஏற்படுத்தும் ஷாட்களுக்கு உயிரூட்ட Edits இல் கீஃபிரேம்களைப் பயன்படுத்தும் விதம் குறித்து அறிக. பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வகையில் உங்கள் வீடியோக்களை இன்னும் உயிர்ப்புடன் உருவாக்குங்கள், ஒற்றை நபராகப் படமெடுக்கும்போதும் இதனைச் செய்யலாம்!
கீஃபிரேம்கள் உங்கள் வீடியோக்களை மிகவும் டைனமிக்காக உணர வைக்க எளிதாக உதவும்.
கீஃபிரேம்கள் உங்கள் ஷாட்களில் உணர்ச்சி அல்லது விவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க சிறந்தவை.
எழுத்து, மேலடுக்குகள் மற்றும் கட்-அவுட்கள் போன்ற உங்கள் வீடியோக்களின் பிற மீடியா விவரங்களில் நீங்கள் கீஃபிரேம்களைப் பயன்படுத்தலாம்.
உங்கள் வீடியோக்கள் சுவாரஸ்யமற்றதாக இருப்பதாக நீங்கள் எப்போதாவது உணர்ந்திருந்தால், அது நீங்கள் கீஃபிரேம்களைப் பயன்படுத்தாததால் இருக்கலாம்.
[ 0:05 ] அதேசமயம் *இதை* Edits இல் கீஃபிரேம்கள் மூலம் எளிதாக அடையலாம். உங்கள் காட்சிகளுக்கு உயிரூட்டுவது எப்படி என்பதைப் பற்றிப் பேசுவோம்.
நகர்வு ஏதும் இல்லாத அசைவற்ற காட்சிகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் வீடியோவில் உள்ள அனைத்தும் அசைவின்றி நிற்கும் உணர்வை ஏற்படுத்தும். ஆனால் கீஃபிரேம்களைப் பயன்படுத்தி மெதுவாக ஜூம்-இன் செய்வது, உங்கள் ஷாட்டில் உள்ள உணர்வு அல்லது நுணுக்கத்தை வலியுறுத்தத் தொடங்கும்.
[ 0:24] அதனை இப்படித்தான் நாங்கள் செய்கிறோம்.
நீங்கள் கீஃபிரேம்களைச் சேர்க்க விரும்பும் கிளிப்பைத் தேர்வுசெய்யுங்கள். + பட்டனைப் பயன்படுத்தி, டைமண்ட் ஐகானைத் தட்டுங்கள். கிளிப்பின் இறுதி வரை ஸ்க்ரப் செய்யுங்கள், பின்னர் ஜூம் செய்ய, பிஞ்ச் செய்யுங்கள். அவ்வளவுதான். நாம் அதை மீண்டும் பார்ப்போம்.
இப்படித்தான்!
இது உங்கள் ஷாட் உயிர்ப்புடன் தோன்றத் தொடங்குவதால் பார்வையாளரின் கவனத்தைத் தக்கவைக்க உதவும் அசைவைப் பின்பற்ற, கண்களைத் தூண்டுகிறது.
[ 0:44 ] உரை, மேலடுக்குகள் மற்றும் கட்-அவுட்களுக்கும் கீஃப்ரேம்கள் கிடைக்கின்றன.
நீங்கள் சில தலைப்புகளைச் சேர்த்தாலும், கேமராவை நேரடியாகப் பார்த்து பேசினாலும் அல்லது உங்கள் ஷாட்டை ஒரு பீட் டிராப்புடன் ஒத்திசைத்தாலும், நீங்களாகவே படமெடுக்கும்போதும் உங்கள் வீடியோக்களை மிகவும் உயிர்த்துடிப்புள்ளதாக உணர வைக்க, கீஃபிரேம்கள் ரகசிய ஆயுதமாகும்.
