பணிமுறைக் கருவிகள்

உங்கள் சிந்தனைச் செயல்முறையைச் சீரமைத்தல்

தோன்றுபவர். @omgadrian

Edits இல் உள்ள யோசனைகள் பிரிவானது, உள்ளடக்கத்தைச் சேமித்தல், ஒட்டுச்சீட்டுகள் மூலம் குறிப்புகளைக் குறித்தல் மற்றும் பலவற்றின் மூலம் உங்கள் படைப்பு உத்வேகத்தை ஒரே இடத்தில் சிரமமின்றி ஒழுங்கமைக்கவும் மீண்டும் பார்வையிடவும் உதவும் விதத்தைக் கண்டறிந்திடுங்கள்.

Instagram இல் நீங்கள் சேமித்த உள்ளடக்கம் உட்பட, உங்கள் யோசனைகள் மற்றும் உத்வேகத்தைத் திறம்பட மீண்டும் பார்வையிடலாம்.

குறிப்புகள், யோசனைத் துணுக்குகள், ஸ்கிரிப்ட்கள் மற்றும் பலவற்றை எழுதிக் கொள்ள ஒட்டுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

உருவாக்கும் நேரம் வரும்போது, ​​எளிதாக அணுகுவதற்குத் தேவையான அனைத்து மீடியா விவரங்களையும் ஒரே இடத்தில் வைத்திருக்கலாம்.

யோசனைகள் பெருக்கெடுத்து பின்னர் அனைத்தையும் மறந்துவிட்டதுண்டா? அல்லது அந்த விஷயத்தை நீங்கள் குறித்துவைத்துள்ளீர்கள் என்று உறுதியாக நினைக்கிறீர்கள், எனினும் அதை எங்கே குறித்துவைத்தீர்கள் என்பதை நினைவில் கொள்ள முடியவில்லையா?

அதிர்ஷ்டவசமாக, Edits உங்கள் யோசனைகளையும், நீங்கள் உற்சாகமடையும் வகையில் நீங்கள் காணும் உள்ளடக்கத்தையும் கண்காணிப்பதை எளிதாக்குகிறது.

Edits, உங்கள் ஃபோனில் சிறந்த வீடியோக்களை உருவாக்க உங்களுக்குத் தேவையான ஒரே செயலி.

[0:17] நீங்கள் சேமித்த உத்வேகத்தை அணுகத் தொடங்க இங்குள்ள யோசனைகள் பிரிவுக்குச் செல்லுங்கள், இதில் நீங்கள் Instagram இல் சேமித்த உள்ளடக்கமும் அடங்கும்.

[0:22] நீங்கள் வழங்கும் விஷயங்களில் குறிப்புகளைச் சேர்ப்பது, வீடியோவிற்கான ரஃப் கட்டுக்கான குறிப்பெடுத்தல் போன்ற அனைத்து வகையான தேவைகளுக்கும் ஒட்டுச்சீட்டுகள் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

[0:31] பின்னர் நீங்கள் ஒட்டுச்சீட்டுகள் மற்றும் இசை அல்லது எஃபெக்ட்கள் போன்ற சேமித்த உத்வேகத்தை நேரடியாக உங்கள் திட்டப்பணிகளில் பயன்படுத்தலாம், இதனால் உங்கள் குறிப்புகள் உங்கள் விரல் நுனியில் இருக்கும்.

Edits இந்த அற்புதமான எல்லா அம்சங்களுடனும் நிரம்பியுள்ளது. இது உங்கள் சிந்தனைச் செயல்முறையைக் கண்காணிக்கவும் ஒழுங்கமைக்கவும் உதவுகிறது, இதனால் நீங்கள் உருவாக்கத் தயாராக இருக்கும்போது இன்னும் அதிக நம்பிக்கையுடன் உணரலாம்.