கேமரா கருவிகள்

மேம்படுத்தப்பட்ட தரத்துடன் படமெடுத்திடுங்கள்

தோன்றுபவர். @omgadrian

சமரசம் செய்யாமல் உயர்தர வீடியோவைப் படமெடுங்கள். 4K அல்லது HDR வரை படமெடுத்து, உங்கள் சாதனம் ஆதரிக்கும் அதிகபட்சத் தெளிவுத்திறனில் எக்ஸ்போர்ட் செய்யுங்கள்.

HD, 2K, 4K அல்லது HDR இல் படமெடுத்து உங்கள் ஃபிரேம் வேகத்தைத் தேர்வுசெய்யவும். நீங்கள் படமெடுப்பதே நீங்கள் எக்ஸ்போர்ட் செய்வது — படமெடுத்தது முதல் பதிவேற்றுவது வரை தரம் சீராக இருக்கும்.

உங்கள் காட்சிகளை மேம்படுத்தக்கூடிய உள்ளமைந்த கருவிகள். தனிப்பட்ட ஷூட்களுக்கான கவுண்டவுன் டைமர், நீங்கள் பேசுவது போன்ற வீடியோக்களுக்கான டச்-அப் மற்றும் தொடர்வதற்கு முன் சரிபார்க்க கிளிப் முன்னோட்டம்.

உங்கள் ஃபோனின் கேமரா மற்றும் எடிட்டிங் செயலிக்கு இடையே இனி நீங்கள் மாற வேண்டியதில்லை. Edits, படைப்பாளர்கள் உண்மையில் எவ்வாறு படமெடுக்கிறார்களோ அதற்காகவே உருவாக்கப்பட்ட கேமராவை வழங்குகிறது, மேலும் அதை எடிட்டிங் டைம்லைனில் எளிதாகக் காட்டுகிறது.

"புதிய கேமரா தேவையில்லை. உங்களுக்கு Edits செயலி மட்டுமே தேவைப்படும். Edits இல் உள்ள மேம்படுத்தப்பட்ட கேமராவைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். எனது கருத்தில், உங்கள் ஃபோனில் படமெடுக்கும்போது நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய சிறந்த அம்சங்களில் ஒன்று இதுவாகும். Edits — உங்கள் ஃபோனில் சிறந்த வீடியோக்களை உருவாக்க உங்களுக்குத் தேவையான ஒரே செயலி, மேலும் இது குறிப்பாகப் படைப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கேமராவைக் கொண்டிருப்பதால், ஒரே செயலியிலேயே எல்லா வேலைகளையும் மிக எளிதாகச் செய்து முடிக்கலாம், அத்துடன் முன்னும் பின்னுமாக நிலைமாற வேண்டிய அவசியமில்லை. அதிகக் கட்டுப்பாடு மற்றும் சிறந்த காட்சிகளை விரும்புபவர்கள்.

[ 0:22 ] நீங்கள் எந்த வகையான வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்கினாலும், இந்தக் கேமராக் கட்டுப்பாடுகளை உள்ளமைப்பதை Edits எளிதாக்குகிறது. உங்கள் காட்சிகளைப் பதிவுசெய்வதைத் தொடங்க Edits இல் உள்ள கேமராவிற்குச் செல்லலாம், மேலும் உங்கள் தெளிவுத்திறனின் மீது முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கலாம். அதாவது, உங்கள் வீடியோ பதிவின் தரத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. உங்கள் சாதனத்தைப் பொறுத்து, படமெடுப்பதற்கு HD, 2K, 4K அல்லது HDR போன்றவற்றுக்கு இடையே எளிதாக மாறலாம்.

வினாடிக்கு உங்கள் ஃபிரேம்களைத் தேர்வுசெய்யும் திறனும் உங்களுக்கு உள்ளது, அத்துடன் நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யும்போதும், படமெடுக்கும்போது உங்கள் தரம் பதிவேற்றும்போதும் மாறாது என்பதை அறிந்து நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். நான் வெறுக்கும் விஷயம் என்னவென்றால், சிறப்பாகத் தோன்றும் ஒரு விஷயத்தைப் படமெடுத்தால், எடிட்டிங்கை முடித்துவிட்டு, நான் அதை எக்ஸ்போர்ட் செய்து பதிவேற்றும் சமயம் அது உருளைக்கிழங்கில் படமெடுக்கப்பட்டது போல் தோன்றுவதுதான்.

[ 1:00 ] கேமராவில் உள்ள மற்றொரு சிறந்த அம்சம் டைமர் ஆகும். நீங்களே படம் பிடிக்கும்போது, உங்கள் ஷாட்டை ஃபிரேம் செய்து, பதிவுசெய்தல் பட்டனை அழுத்திவிட்டு, அதன் பிறகு கேமராவின் முன் வந்து நிற்க வேண்டும். Edits இல், நீங்கள் இங்கே கவுண்டவுன் டைமரை அமைக்கலாம். நான் எனது ஃபிரேமை அமைப்பதையும், டைமரைத் தேர்வுசெய்வதையும்,கேமராவின் முன் வந்து நிற்பதையும் பாருங்கள். அவ்வளவுதான், ஜீபூம்பா! உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே பதிவுசெய்யத் தொடங்குங்கள். அதேபோல், உங்களுக்குத் தேவையில்லாத பிட்களுக்காக ஃபோன் சேமிப்பகத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

[ 1:24 ] இங்குள்ள டச்-அப் அம்சம், நீங்கள் பேசுவது போன்ற வீடியோக்களுக்கு மேலும் சில மெருகேற்றங்களை எளிதாகச் சேர்ப்பதற்கான விரைவான வழியாகும். நிறைவாக, அதே சமயம் மிக முக்கியமான ஒரு அருமையான வழிமுறை 'கிளிப் முன்னோட்டம்' செயல்முறை. உங்கள் ஷாட்டைப் பதிவுசெய்த பிறகு இங்கேயே உள்ள கிளிப்களைத் தட்டுங்கள், பின்னர் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்கும் முன் உங்கள் கிளிப்பை முன்னோட்டமிடலாம். இது உதவும் என நம்புகிறோம். Edits கேமராவைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்."