வீடியோ எடிட்டிங்
எஃபெக்ட்டுகளை ஒரே தட்டலில் பயன்படுத்தலாம்
தோன்றுபவர். @omgadrian
ஹைலைட் செய்தல், அடையாளமிடுதல் அல்லது உங்கள் வீடியோக்களில் உள்ள குறிப்பிட்ட நபர்கள் அல்லது பொருட்களை மங்கலாக்குதல் போன்ற விஷயங்களைச் செய்ய எளிதாக எஃபெக்ட்களைச் சேர்த்திடுங்கள். எந்தவொரு படைப்பாளருக்கும், எந்தவொரு பாணிக்கும் பொருந்தும் இந்த எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த எஃபெக்ட்டுகள் மூலம் உங்கள் உள்ளடக்கத்தைத் தனித்துத் தெரியும்படி செய்யுங்கள்.
சிரமமில்லாத எடிட்டிங்: சிக்கலான பணிமுறைகளை ஒரே தட்டலில் பெறலாம்.
இலக்கிடப்பட்ட எஃபெக்ட்டுகள்: குறிப்பிட்ட நபர்கள் அல்லது பொருட்களை எளிதாக ஹைலைட் செய்யலாம், மறைக்கலாம் அல்லது லேபிளிடலாம்.
தனித்துத் தெரியவைத்தல்: உங்கள் வீடியோக்களை ஃபீடில் தெரியும்படியும் கவனத்தை ஈர்க்கும்படியும் செய்யுங்கள்.
பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, உங்கள் வீடியோக்களைத் தனித்துத் தெரியச் செய்ய இனி எந்தவொரு அற்புதமான மென்பொருளும் தேவையில்லை.
Edits உங்கள் முழுப் படைப்பாற்றல் செயலாக்கத்திற்கும் உதவிகரமாக உள்ளது, எனவே நீங்கள் சிறந்த வீடியோக்களை உருவாக்க முடியும்.
உங்கள் வீடியோக்களைத் தனித்துத் தெரியச்செய்ய உதவும் வகையில் Edits இல், இந்த இலவச எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்துவது, முன் எப்போதும் இவ்வளவு எளிதாக இருந்ததில்லை. வீடியோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு வினாடிகளில் நீங்கள் எஃபெக்ட்டைப் பயன்படுத்தலாம்.
ஏனெனில் பொதுவாக, இதுபோன்ற விஷயங்களை ஃபிரேம் பை ஃபிரேம் செய்ய வேண்டியிருக்கும்.
இது அடையாளமிடல் எஃபெக்ட் ஆகும். இதனை எவ்வாறு செய்வது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டேன்.
உங்கள் வீடியோ எடிட்டில், "எஃபெக்ட்டுகள்" என்பதைப் பார்க்கும் வரை கீழ் நேவிகேஷன் பட்டிக்குச் செல்லுங்கள். அதைத் தேர்ந்தெடுத்து "அடையாளமிடுக" என்பதைக் கிளிக் செய்யுங்கள். இங்கே கிளிக் செய்து, பின்னர் சரியான அடையாளமிடலைச் சேர்த்தால், அவ்வளவுதான்!
எனக்கு இதில் மிகவும் பிடித்தது என்னவென்றால், உங்கள் வீடியோவைப் பார்ப்பவர்கள், நீங்கள் எந்த நிறுவனங்கள், பிராண்டுகள் அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்க்கும் போதே அறிந்துகொள்வதை மிகவும் எளிதாக்கிவிட்டது என்பதுதான்.
நீங்கள் எந்த வகையான உள்ளடக்கத்தை உருவாக்கினாலும், அது வாழ்க்கைமுறை அல்லது ஃபேஷன் அல்லது என்னைப் போன்ற தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு படைப்பாளரும் இந்த எஃபெக்ட்டுகளில் பல பயன்பாடுகளைக் கண்டறியலாம்.
