கிரியேட்டிவ் உத்வேகம்
உங்கள் அடுத்த வீடியோவிற்கான உத்வேகத்தைப் பெறுங்கள்
தோன்றுபவர். @omgadrian
பிரபலமான ஆடியோக்கள், பிரபலமான தலைப்புகள் மற்றும் பயன்படுத்தத் தயாராக உள்ள டெம்ப்ளேட்கள் உட்பட நீங்கள் பதிவிடுவதன் அடிப்படையில் நபருக்கேற்ப அமைக்கப்பட்ட உத்வேகத்தைப் பெறலாம்.
உள்ளமைந்த உத்வேகப் பிரிவு மூலம் படைப்புத்திறன் முடக்க நிலையை வெல்லுங்கள். பிற படைப்பாளர்கள் எவற்றைப் பதிவிடுகிறார்கள், எது கவனத்தை ஈர்க்கிறது என்பதைப் பாருங்கள் — உங்கள் அடுத்த யோசனைக்கு உத்வேகம் அளிக்கும் அனைத்தும் ஒரே இடத்தில்.
யோசனைகளைச் சேமித்து பக்கச்சுவடி செய்து, எது தனித்துத் தெரிந்தது மற்றும் அதற்கு உங்கள் சொந்தக் கற்பனையை எவ்வாறு சேர்ப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள, ஒட்டுச்சீட்டுகளைச் சேர்த்திடுங்கள்.
உங்கள் அடுத்த வீடியோவை மேம்படுத்த பிரபலமான ஆடியோக்கள், பிரபலமான தலைப்புகள் மற்றும் டெம்ப்ளேட்களுக்கான பரிந்துரைகளைப் பெறுங்கள்.
"உங்களை எவ்வாறு உத்வேகமாக வைத்துக்கொள்வது என்பது பற்றி பேசலாம். Edits — உங்கள் ஃபோனில் சிறந்த வீடியோக்களை உருவாக்க, உங்களுக்குத் தேவையான ஒரே செயலி.
[ 0:07 ] படைப்புத்திறன் முடக்க நிலை என்பது ஒரு உண்மையான விஷயம், சில சமயங்களில் அது நாம் செய்ய விரும்பும் விஷயத்தை உண்மையில் செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கலாம், அதாவது படைப்புத்திறனை வெளிப்படுத்துவதைத் தடுக்கலாம். Edits உங்களுக்கு இதனை எளிதாக்குகிறது, ஏனெனில் இங்கே நீங்கள் பார்க்கக்கூடிய செயலி சார்ந்த உத்வேகப் பிரிவினுள், உங்கள் யோசனை உருவாக்கச் செயல் தொடரின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு உதவக்கூடிய, கிரியேட்டிவ் copilot ஒன்று உள்ளது.
[ 0:22 ] மற்ற படைப்பாளர்கள் எவற்றைப் பதிவிடுகிறார்கள் என்பதையும், உங்கள் அடுத்த வீடியோவிற்கான உத்வேகமாகச் செயல்படும் வகையில் எந்த விஷயம் கவனத்தை ஈர்க்கிறது என்பதையும் நீங்கள் பார்க்கலாம். இங்கே உள்ள பிளஸ் குறியை அழுத்தி, குறிப்பிட்ட வீடியோக்களைப் பற்றி நீங்கள் விரும்பும் விஷயங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு மீண்டும் உருவாக்க விரும்பலாம் என்பதை நினைவூட்டும் வகையில் ஒட்டுச்சீட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் யோசனைகளையும் நீங்கள் சேமிக்கலாம்.
[ 0:40 ] மேலும் பிரபலமான ஆடியோக்கள் மற்றும் பிரபலமான தலைப்புப் பரிந்துரைகளின் இந்த உள்ளுணர்வுடன், உங்களின் அடுத்த ஹிட்டை உருவாக்க உங்களுக்கு உதவ, இங்கே தொடர்ந்து சேர்க்கப்படும் இன்னும் அதிகமான அம்சங்களைப் பயன்படுத்தி உங்களை மேலும் ஊக்குவிக்க இந்தக் கூறுகளைப் பயன்படுத்தலாம். உத்வேகம் எங்கெங்கும் உள்ளது, ஆனால் Edits இல் அதைக் கண்டறிந்து செயல்படுத்துவது இன்னும் எளிதானது. இது உதவும் என நம்புகிறேன்."
