எஃபெக்ட்டுகளை எடிட் செய்தல்

Edits இல் ஃபில்ட்டர்கள், வெட்டுதல் மற்றும் மங்கலாக்குதல் அம்சங்களைப் பயன்படுத்தி எந்தவொரு காட்சியையும் சினிமாட்டிக் தோற்றத்தில் உருவாக்குங்கள

feat. @byjacksonsword

எந்தவொரு வீடியோவுக்கும் சினிமாட்டிக் உணர்வை வழங்க, ஃபில்ட்டர்கள், வெட்டுதல் மற்றும் பின்னணி மங்கல்தன்மையை Edits இல் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக. விலை உயர்ந்த கேமரா தேவையில்லை. உங்கள் ஃபோன் மட்டுமே போதும், வீடியோவின் தரத்தை மேம்படுத்தி, பார்ப்பவர்களைக் கவரும் வகையில் உங்கள் வீடியோக்களைத் தனித்துத் தெரியச் செய்ய சில எளிய வழிமுறைகள் உள்ளன.

உங்கள் கிளிப்பை Edits இல் திறந்து, சினிமாட்டிக் தோற்றத்திற்கான விஷுவல் டோனை அமைக்க ஃபில்ட்டரைச் சேர்த்திடுங்கள்.

ஃபிரேமின் மேல் மூன்றில் ஒரு பகுதியில் கண்கள் இருக்கும் வகையில் வெட்டுங்கள். இது கவனத்தை ஈர்க்கிறது என்பதுடன் கம்போசிஷனை மேம்படுத்துகிறது.

உங்கள் படத்தின் முக்கியப் பகுதியைப் பின்னணியிலிருந்து தனித்துப் பிரித்திட, கட்-அவுட்ஸ் அம்சத்தைப் பயன்படுத்தி, பின்னர் பின்னணியை மங்கலாக்கி அதன் மூலம் வீடியோவின் தரத்தை மேம்படுத்துங்கள்.

உங்களுக்கு விலையுயர்ந்த கேமரா தேவையில்லை. Edits இல் உள்ள ஃபில்ட்டர்கள், வெட்டுதல் மற்றும் மங்கலாக்குதல் ஆகியவை எந்தவொரு ஃபோன் காட்சியையும் சினிமா காட்சியாக உணர வைக்கும்.

"இந்தப் பின்னணி மங்கல்தன்மை, ஃபில்ட்டர் மற்றும் வெட்டுதலை நான் சேர்க்கும்போது கவனித்தீர்களா? இந்த வீடியோ காட்சி மிகவும் தொழில்முறையான சினிமா காட்சியாகத் தோன்றுகிறது. இப்போது, Instagram இல் சினிமாட்டிக் ரீல்ஸ் வைரலாகி வருவதை அனைவரும் அறிவார்கள், ஆனால் அந்தத் தோற்றத்தை நாம் எவ்வாறு உருவாக்குவது?

இது திரைப்பட உருவாக்கக் கருத்துகளான டெப்த் மற்றும் கம்போசிஷனை விளக்குகிறது. பாருங்கள், பின்னணியிலிருந்து பொருளைப் பிரிக்கவும், அந்த சினிமா உணர்வைப் பெறவும் மற்றும் எடுக்கப்பட்ட படம் எவ்வாறு ஃபிரேம் செய்யப்பட்டுள்ளது மற்றும் நம் கண்கள் எங்கு செல்கின்றன என்பதைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

Instagram Edits இல், இந்த எஃபெக்ட்டுகளைப் பெற இனி உங்களுக்கு விலையுயர்ந்த கேமரா தேவையில்லை. உண்மையில், உங்கள் ஃபோன் மட்டுமே போதும்.

முதலில், உங்கள் கிளிப்பைத் திறந்து, நீல நிறத்தில் காணப்படும் ஃபில்ட்டரைச் சேர்க்கவும்.

பின்னர், கண்ணின் கிடைமட்டக் கோடு மேல் மூன்றில் ஒரு பகுதியில் இருக்கும் வகையில் அதை வெட்டுங்கள். இது மக்கள் அதிகம் கவனம் செலுத்த உதவுகிறது.

பின்னர், கட் அவுட் அம்சத்தைத் தேர்ந்தெடுத்து, மீதமுள்ளவற்றை Edits செயல்படுத்த அனுமதித்திடுங்கள்.

அடுத்து, கீழ் அடுக்கு, எஃபெக்ட்டுகள், மங்கல் என்பதைக் கிளிக் செய்து, முழு ஃபிரேமைத் தேர்வுசெய்து, அதை 7% என அமைத்திடுங்கள்.

இதன் மூலம், உண்மையில், எந்தவொரு காட்சிப்பதிவும் சினிமாட்டிக்காக மாற்றலாம்."