வீடியோ எடிட்டிங்
Edits தலைப்புகளுக்கான தொடக்க வழிகாட்டி: வீடியோ தலைப்புகளைப் பயன்படுத்தும் மற்றும் விருப்பப்படியாக்கும் விதம்
feat. @omgadrian
உங்கள் வீடியோக்களைப் பாப் செய்து, பார்வையாளர்களைத் தொடர்ந்து பார்க்கவைக்க விரும்புகிறீர்களா? Edits வாசகம் கருவியானது, ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் முழுமையான எழுத்துப்பிரதியையும், பல்வேறு விதமான கிரியேட்டிவ் ஸ்டைலிங் விருப்பத்தேர்வுகளையும் உங்களுக்கு வழங்குகிறது. இது இலவசம், வரம்பற்றது மற்றும் முழுமையாக விருப்பப்படியாக்கத்தக்கது.
சிலர் தங்கள் உள்ளடக்கத்தை அமைதிப் பயன்முறையில் பார்க்க விரும்புகிறார்கள். மேலும் ஒலி முடக்கத்தில் இருக்கும்போதும் அவர்கள் தொடர்ந்து பார்ப்பதற்காக வாசகங்கள் அவசியமாகின்றன. கவலை வேண்டாம், Edits அதை எளிதாக்குகிறது.
ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம். உங்கள் வீடியோவின் அடிப்படையில் Edits அதுவாகவே வாசகங்களை உருவாக்கும்.
எழுத்துப்பிரதி அதுவாகவே இயக்கப்படும், எனினும் வாசகங்கள் முழுமையாக விருப்படியாக்கக்கூடியவை: எழுத்தின் எழுத்துருவையும், நிறத்தையும் மாற்றி, உங்கள் தனிப்பட்ட பாணியைச் சேர்த்து மெருகேற்றலாம். அங்கு டஜன் கணக்கான விருப்பத்தேர்வுகள் உள்ளன.
இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் புகைப்படக் கலைஞராகவும் Edits நிபுணராகவும் உள்ள @omgadrian வழங்கும் விரைவான மற்றும் எளிய விளக்கத்தின் மூலம் வாசகங்கள் கருவியை அறிந்து கொள்ளுங்கள். அவரது பயிற்சி வகுப்புகள் மற்றும் டுடோரியல்கள், படைப்பாளர்களுக்கு வீடியோ கதை சொல்லலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன.
உங்கள் வீடியோக்களுக்கு நீங்கள் வாசகங்களைச் சேர்க்கவில்லை எனில், உங்கள் வீடியோ தொடங்குவதற்கு முன்பே பார்வைகளை இழக்கக்கூடும்.
அதிக அளவிலான பார்வையாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை அமைதிப் பயன்முறையில் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் உங்கள் வீடியோவைத் தொடர்ந்து பார்ப்பதற்கும், ஸ்வைப் செய்து கடந்துவிடாமல் இருக்கவும், அவர்கள் தொடர்ந்து இணைந்திருக்கவும் சில காட்சிப் பொருட்கள் இருப்பது முக்கியம். அந்தப் பிரச்சினையை உங்களுக்காக நாங்கள் தீர்க்கப் போகிறோம்.
Edits உங்கள் முழுப் படைப்பாற்றல் செயலாக்கத்திற்கும் உதவிகரமாக உள்ளது, எனவே நீங்கள் சிறந்த வீடியோக்களை உருவாக்க முடியும்.
நான் எனது திருத்தத்தை முழுமையாக முடித்த பிறகே இந்தப் படிநிலையை மேற்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் செய்ய வேண்டியது, கருவிப்பட்டையில் உள்ள 'வாசகங்கள்' என்பதை அழுத்த வேண்டும். அது உங்கள் வீடியோவைக் கேட்டு, உங்களுக்காக வாசகங்களை உருவாக்கும். நீங்கள் விரும்பும் விதத்தில் எழுத்துப்பிரதியைத் திருத்திக் கொள்ளும் வசதி உங்களுக்கு உள்ளது. உங்கள் ரசனைக்கு ஏற்ப, முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட பல்வேறு பாணிகளைத் தேர்வுசெய்யலாம் அல்லது உங்கள் சொந்த எழுத்துருவையும் நிறத்தையும் தேர்வுசெய்து முழுமையாக விருப்பப்படியாக்கலாம். தேர்வுசெய்ய, ஏராளமான விருப்பத்தேர்வுகளை Edits உங்களுக்கு வழங்குகிறது.
உங்கள் வீடியோக்களுக்கு வாசகங்களைச் சேர்க்கும் ஒவ்வொரு படிநிலையும் முழுமையாக விருப்பப்படியாக்கக்கூடியது. உங்கள் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் வைத்திருக்க, இது ஒரு திருப்புமுனையாக அமையும்.
[:48s Example Video] இந்த வீடியோவுக்கு வாசகங்கள் தேவைப்படுகின்றன, எனக்காக அதனை விரைவாகவும் எளிதாகவும் Edits தானாகவே செய்யும்.
எனக்கு இதில் மிகவும் பிடித்தது என்னவென்றால், உங்கள் வீடியோவைப் பார்ப்பவர்கள், நீங்கள் எந்த நிறுவனங்கள், பிராண்டுகள் அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்க்கும் போதே அறிந்துகொள்வதை மிகவும் எளிதாக்கிவிட்டது என்பதுதான்.
