எஃபெக்ட்டுகளை எடிட் செய்தல்
Edits இல் உள்ள இலவச வாசக உருவாக்கி மூலம் வீடியோக்களில் வாசகங்களைச் சேர்த்தல்
தோன்றுபவர். @camilaatunoni
வினாடிகளில் உங்கள் வீடியோவில் துணை வசனங்களைச் சேர்க்கலாம். Edits இல் உள்ள வாசக உருவாக்கி அமைப்பானது நேரத்திற்கு ஏற்ற வாசகங்களைத் தானாகவே உருவாக்குகிறது, மேலும் பல்க் எடிட்டர் அம்சம் அனைத்தையும் ஒரே நேரத்தில் நிர்வகிக்க உங்களுக்கு உதவுகிறது. எழுத்தை ஒரே இடத்தில் பிரிக்கலாம், ஒருங்கிணைக்கலாம் மற்றும் சரிசெய்யலாம் - அவை அமைக்கப்பட்டதும், அவற்றுக்கு வரியின் உயரம், அவுட்லைன் அகலம் மற்றும் நிறக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் மெருகேற்றப்பட்ட தோற்றத்தை அளித்திடுங்கள்.
Edits இல் வாசகங்கள் என்பதைத் தட்டுங்கள், உங்கள் வாசகங்கள் தானாகவே உருவாகும்.
ஏதேனும் வாசக எழுத்தைக் கிளிக் செய்வதன் மூலம் பல்க் எடிட்டரைத் திறந்திடுங்கள். அங்கிருந்து நீங்கள் பல வாசகங்களை ஒரே நேரத்தில் நிர்வகிக்கலாம்: எழுத்துப்பிழைகளைச் சரிசெய்யலாம், இணைக்கலாம், வாசகத்தைப் பிரிக்கலாம், அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் செய்யலாம்.
நீண்ட வாக்கியங்களைச் சிறிய வாக்கியங்களாகப் பிரிக்கவும், இதனால் உங்கள் வாசகங்கள் விரைவாகத் தோன்றுவதுடன் திரையில் தெளிவாகத் தெரியும்.
பல்க் எடிட்டர் கருவி, வாசகங்களை ஒவ்வொன்றாக எடிட் செய்ய வேண்டிய தேவை இல்லாமல், நேரத்தையும் வாசகத்தையும் நுணுக்கமாகச் சரிசெய்வதை எளிதாக்குகிறது.
"இந்த வீடியோவில் உள்ள வசனங்களைக் கவனித்தாயா? அவை மிகவும் தெளிவாகவும் சரியான நேரத்திலும் எவ்வாறு காட்டப்படுகின்றன என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ரகசியம் என்பது Edits ஆகும், புதிய வாசகத்தின் பல்க் எடிட்டர் கருவியைப் பயன்படுத்தி நான் அதை எவ்வாறு செய்கிறேன் என்பதை இன்று உங்களுக்குக் காட்டப் போகிறேன்.
Editsஐத் திறந்து, உங்கள் கிளிப்புகள் தயாரானதும், வாசகங்களைத் தட்டுவோம். இது வினாடிகளில் உங்கள் வீடியோவிற்கான வாசகங்களை உருவாக்கும்.
புதிய வாசக பல்க் எடிட்டர் மூலம் விஷயங்கள் இங்குதான் மிகவும் சிறப்பாக மாறுகின்றன. ஏதேனும் வாசகத்தைக் கிளிக் செய்தால் போதும், ஒரே நேரத்தில் பல வாசகங்களை நிர்வகிக்கலாம், எழுத்துப்பிழைகளைச் சரிசெய்யலாம், இணைக்கலாம், வாசகத்தைப் பிரிக்கலாம், அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் செய்யலாம்.
எனது வீடியோக்களை இன்னும் டைனமிக்காக வைத்திருக்க, நீண்ட வாக்கியங்களை நான் எப்போதும் பிரிக்கிறேன், இதனால் வசனங்கள் விரைவாகத் தோன்றுவதுடன் தெளிவாகவும் இருக்கும். இது எடிட் செய்வதை மிகவும் எளிதாக்குகிறது. இப்போது உங்கள் முறை, இதனைப் பயன்படுத்திப் பாருங்கள். அது எப்படி இருக்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்."

