Editsஐ அறிமுகப்படுத்துகிறோம்: உங்கள் ஃபோனில் சிறந்த வீடியோக்களை உருவாக்கலாம்
இன்று, படைப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய வீடியோ உருவாக்கும் செயலியான, Editsஐ வெளியிடுகிறோம். Instagram பயனர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவும் வகையில் உள்ளது, மேலும் Instagram அல்லது Facebook இல் மட்டுமல்லாமல் எந்தவொரு தளத்திலும் இதனைச் செய்ய உதவும் வகையில் சிறந்த கிரியேட்டிவ் கருவிகளை உருவாக்க விரும்புகிறோம். இது இந்தப் பயணத்தின் முதல் படிநிலை மட்டுமே, மேலும் உங்கள் கருத்துகளைக் கொண்டு Editsஐ மேம்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் நாங்கள் உற்சாகமாகக் காத்திருக்கிறோம்.
உங்கள் உருவாக்கும் செயல்முறைக்கு உதவும் அனைத்துக் கருவிகளையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்குகிறோம்
வீடியோக்களை உருவாக்கும் செயல்முறை சவாலானதாக இருக்கலாம், பெரும்பாலும் பல செயலிகளும் சிக்கலான பணிமுறைகளும் தேவைப்படுகின்றன. Edits இல், வீடியோ உருவாக்கத்திற்கான சக்திவாய்ந்த திறன்களுடன் கூடிய பிரத்தியேகமான இடம் இப்போது உங்களுக்கு உள்ளது.
- உங்கள் முழுமையான உருவாக்கும் செயல்முறையையும் ஒரே இடத்தில் நிகழுமாறு செய்யலாம். யோசனைகளைக் கண்காணித்தல், உங்கள் திட்டப்பணிகளை நிர்வகித்தல், செயலியை விட்டு வெளியேறாமல் வாட்டர்மார்க் இல்லாமல் எடிட் மற்றும் எக்ஸ்போர்ட் செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
- உயர்தரக் கேமரா, துல்லியமான டைம்லைன் மற்றும் கட்-அவுட்கள் அல்லது AI உதவியுடன் அனிமேஷன் போன்ற எஃபெக்ட்டுகள் நிறைந்த சக்திவாய்ந்த கருவிகள் மூலம் சிறந்த வீடியோக்களை உருவாக்குங்கள்.
- பிரபலமான ஆடியோ மற்றும் சிறப்பாகச் செயல்படுவதைக் காட்டும் செயல்திறன் புள்ளிவிவரங்களுடன் கூடிய ரீல்ஸின் உத்வேகமளிக்கும் ஃபீடைப் பயன்படுத்தி உங்கள் உள்ளடக்கத்தை உகந்ததாக்குங்கள்.
உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஒரு செயலியைக் கட்டமைத்தல்
குறுகிய வடிவ வீடியோ உருவாக்கத்தின் தேவைகளை உண்மையில் பூர்த்தி செய்யும் செயலியைக் கட்டமைக்க, உங்களைப் போன்ற படைப்பாளர்களுடன் நெருக்கமாகக் கூட்டாளராக இருப்பது முக்கியம்.
கடந்த ஆண்டு முதல் வெவ்வேறு கருத்தாக்கங்களைச் சோதித்து, அவற்றைச் செயல்படுத்துவதில் அவர்களின் கருத்துகளை உள்ளடக்க நாங்கள் பல படைப்பாளர்களுடன் குழுமுயற்சி செய்து வருகிறோம். செயலியில் தங்கள் கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்து வரும் பல படைப்பாளர்களுக்கும் Editsக்கான முன்கூட்டிய அணுகலை நாங்கள் வழங்கியுள்ளோம். அவர்களில் சிலர் கூறியது இங்கே:
Edits இல் அடுத்து வரவுள்ள அம்சம்?
நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தும் விதத்தில் உங்கள் கருத்து முக்கியப் பங்கு வகிக்கிறது, மேலும் அதிகம் கோரப்பட்ட சிறந்த அம்சங்களை Edits இல் கட்டமைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புதிய அம்சங்கள் மற்றும் புதுப்பிப்புகளைச் சேர்க்க நாங்கள் ஏற்கெனவே பணியாற்றி வருகிறோம், இதில் செயலியில் விரைவில் வரக்கூடிய கீழே உள்ள சில ஹைலைட்டுகளும் அடங்கும்.
- கீஃபிரேம்கள்: உங்கள் கிளிப்களின் இருக்குமிடம், சுழலும் வேகம் மற்றும் அளவை அனிமேஷன் செய்ய, சரியான தருணங்களைப் பின்பாயிண்ட் செய்யலாம்.
- திருத்துதல்: AI மூலம் உங்கள் வீடியோக்களின் தோற்றம் & உணர்வை விரைவாக மாற்றலாம்.
- குழுமுயற்சி: கருத்து மற்றும் கூட்டுப் படைப்புகளுக்காக நண்பர்கள், பிற படைப்பாளர்கள் அல்லது பிராண்டுகளுடன் வரைவுகளை எளிதாகப் பகிரலாம்.
- உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான கூடுதல் விருப்பத்தேர்வுகள்: அதிகமான எழுத்துருக்கள், எழுத்து அனிமேஷன்கள், நிலைமாற்றங்கள், குரல் எஃபெக்ட்கள், ஃபில்ட்டர்கள், ஒலி எஃபெக்ட்கள் மற்றும் இசை விருப்பத்தேர்வுகள், ராயல்டி இல்லாதவை உட்பட.
Edits செயலி உலககெங்கும் கிடைக்கிறது மற்றும் App Store மற்றும் Google Play Store இல் பதிவிறக்க இலவசமாக உள்ளது. தொடங்குவதற்கு, செயலியைப் பதிவிறக்கி, உங்கள் Instagram கணக்கின் மூலம் உள்நுழைந்தால் போதுமானது.
