நீங்கள் தனித்துத் தெரிவதற்கு உதவ, படைப்பாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட Edits கருவிகளைக் கண்டறியுங்கள்

Instagramக்குப் படைப்பாளர்களுடன் நீண்டகால வரலாறு உள்ளது, மேலும் Edits என்பது "நாங்கள் உங்கள் கருத்துகளைக் கேட்கிறோம்" என்பதைக் கூறுவதற்கான எங்கள் சமீபத்திய காதல் கடிதமாகும், மேலும் நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். தனித்துத் தெரிவதற்கும், உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கும் நீங்கள் செயல்படும்போது, நீங்கள் பயன்படுத்தும் கருவிகள் ஒருபோதும் உங்களுக்குத் தடையாக இருப்பதாக நீங்கள் உணரக்கூடாது.


நான் ஷான், Edits குழுவின் பொறியியல் மேலாளர்.


உங்களுக்காக, உங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டது


Edits படைப்பாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. குறியீட்டை எழுத்துவதற்கோ, வடிவமைப்பு ஆவணங்கள் மூலம் பணிபுரிவதற்கோ படைப்பாளர்களை நாங்கள் ஈடுபடுத்தவில்லை, ஆனால் நாங்கள் எதனைக் கட்டமைக்கிறோம் என்பதையும் அதனை உருவாக்கும் விதத்தையும் வடிவமைக்க உதவும் வகையில் படைப்பாளர்கள் முதல் நாளிலிருந்தே கருத்துகளை வழங்கினார்கள்.


…மேலும் இது ஒருபோதும் நிற்கவில்லை!


நானும், Edits முழுக் குழுவும் தினமும் படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். Instagram இல் எங்களிடம் ஒரு DM குழு உள்ளது, அங்கு எங்களின் சில பவர் பயனர்கள் கருத்து வழங்கலாம் மற்றும் அம்சங்களைக் கோரலாம், மேம்படுத்துவது குறித்த குறிப்புகளை எங்களுக்கு அனுப்பும் படைப்பாளர்களின் கவுன்சில் மற்றும் புதிய யோசனைகளைப் பரிசீலிக்க, படைப்பாளர்களுடனான வழக்கமான நேரலை கூட்டத்தொடர்கள் ஆகியவை அடங்கும். சில குழு உறுப்பினர்கள் (நான் உட்பட!) Threads மற்றும் IGஐத் தினமும் படித்து கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். இந்தக் குழுவிற்கு நீங்கள் அனைவரும் உலகம் போன்றவர்கள், மேலும் அனைவரின் சார்பாகவும் நன்றி கூற விரும்புகிறேன்!


உங்கள் அடுத்த வீடியோ யோசனையை ஒன்றிணைந்து செயல்படுத்துவோம்!


எடிட்டிங் அடிப்படைகள் மற்றும் படைப்பாற்றலுக்கான சக்திவாய்ந்த கருவிகள்


Edits உத்வேக ஃபீடு அல்லது Instagram இல் ஸ்க்ரோல் செய்யும்போது உத்வேகத்தின் ஒரு தீப்பொறி உங்களுக்குத் தோன்றியதுண்டா, “என்னால் அதனை உருவாக்க முடியுமா?” என்று நீங்கள் எண்ணியுள்ளீர்களா? @iankyo அவர் முதல் நாளிலிருந்தே Edits குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார், மேலும் இரவுநேரச் சிற்றுண்டிகளை உண்ண வைக்கும் பிரதான நபர், வைரல் ரெசிபிகளின் மன்னன் – சமையல் மற்றும் வீடியோ ஸ்டைல் என இரண்டிலும். நாம் எத்தனை அம்சங்களைச் சேர்த்தாலும் Edits எளிமையானதாகவும் பயன்படுத்த எளிதானதாகவும் இருக்க வேண்டும் என்பதே இயான் அனுப்பிய மெசேஜில் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. சமீபத்தில் அவர் ஒரு வீடியோவைப் பதிவிட்டார், அது இயானின் முத்திரை ஆடியோ ட்ராக், காட்சிகளுக்கு இடையில் சரியான நேரத்தில் கச்சிதமான எடிட்டிங் மற்றும் அவர் செய்யும் உணவைப் பார்த்து நீங்கள் எச்சில் வடிக்கும்போது படிப்பதற்கான டைமிங் வாசகங்களுடன், சுவையான சீஸ் சாஸ் தயார் செய்வதைக் காட்டுகிறது. இந்தக் கருவிகள் ஒவ்வொன்றையும் முதல் பார்வையில் எளிதானதாகவும், தொடர்ந்து பயன்படுத்தும்போது மிகவும் திறன்மிக்கதாக இருப்பதையும் Edits நோக்கமாகக் கொண்டுள்ளது.


எடுத்துக்காட்டாக வாசகங்களைப் பற்றிப் பேசுவோம். ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் வாசகங்களை உருவாக்கி, பதிவிடத் தயாராக வைக்கலாம், ஆனால் நீங்கள் கூடுதல் விருப்பப்படியாக்கலை விரும்பினால், நீங்கள் தேடும் வைபைப் படம்பிடிக்க பல்க் எடிட்டர் மற்றும் ஸ்டைல் எடிட்டரைப் பயன்படுத்தலாம். நாங்கள் புதிய எழுத்துருக்கள், அனிமேஷன்கள் மற்றும் எஃபெக்ட்டுகளைத் தொடர்ந்து வெளியிடுவதால், உங்கள் செயலியைப் புதுப்பிப்பதையும், அவற்றைச் சரிபார்ப்பதையும் உறுதிசெய்யுங்கள், ஏனெனில் அது உங்கள் வைரல் ரெசிபியைக் கண்டறிவதற்கான திறவுகோலாக இருக்கலாம்!


உங்கள் ரீல்ஸுக்கு உயிரூட்ட கீஃபிரேம்களைப் பயன்படுத்துங்கள்


நீங்கள் உங்கள் வீடியோ வடிவத்தைக் கண்டறிய முயற்சித்து, உங்கள் கிளிப்களைப் படமெடுத்து முடித்துவிட்டீர்கள். ஒரு சாதாரண வீடியோவை எடுப்பது ஒரு சிறந்த தொடக்கப்புள்ளியாகும், எனினும் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் தனித்துத் தெரிய, அட்டகாசமான பேனிங், விறுவிறுப்பான ஜூம்கள் மற்றும் ஒவ்வொரு கட்டுக்கும் இடையே அசத்தலான இயக்கங்களைக் கொடுத்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல, நீங்கள் எப்போதாவது விரும்பியிருக்கிறீர்களா? @vitakari (ifykyk) பற்றிய மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்கள் வீடியோக்களின் ஒவ்வொரு கட்டுக்கும் நம்பமுடியாத ஆளுமைத்திறனைக் கொண்டு வருகிறார்கள். இதனைச் செய்வதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிகளில் ஒன்று, கீஃபிரேம்கள் எனப்படும் உண்மையிலேயே வேடிக்கையான அம்சமாகும், இதனை நாங்கள் Edits இல் கொண்டு வருவதற்கு, வைட்டா மிகுந்த ஆர்வம் காட்டினார்.


இனி காட்சியில் ஒரு பொருளை மையத்திற்கு வெளியே காட்டுவதற்காக, ஜூம் செய்யப்பட்ட காட்சியை திடீரென கட் செய்யவோ வீடியோவைச் சங்கடமாகத் திரைக்கு வெளியே நகர்த்தவோ வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, உங்கள் அடுத்த வீடியோவை உயிர்ப்பித்து, கீஃபிரேம்களை முயற்சித்துப் பாருங்கள்!


ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

"கீஃபிரேம்களுக்கான “தளர்வு வளைவு” விருப்பத்தேர்வு எனது மாயைகளுக்கான ஒரு கேம் சேஞ்சராக அமைந்தது!" @vitakari


எங்களுடன் ஒரு ஸ்டோரியைச் சொல்லுங்கள்


Edits என்பது உங்கள் முழுப் படைப்புச் செயலாக்கத்தையும் ஒரே செயலியில் கொண்டு வருவதற்கும், Instagram இல் உங்கள் உள்ளடக்கத்தைத் தனித்துக் காட்டுவதற்குமான எளிய வழியாகும். ஒவ்வொரு வாரமும் செயலியைச் சிறப்பானதாக மாற்றுவதற்காக, படைப்பாளர்களுடன் இந்தச் செயல் தொடரில் இருப்பதற்கு நாங்கள் பெரிதளவில் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் உங்கள் உள்ளடக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் புதிய அம்சங்களைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவோம். இன்றே Editsஐப் பயன்படுத்திப் பாருங்கள், அடுத்து நீங்கள் என்னென்ன அம்சங்களைக் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!